பசிலுக்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு…

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கித்சிறி ரணவக் ஆகியோருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி முதல் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை இன்று(14) அறிவித்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான 2 கோடி 94 லட்சம் ரூபாவை பயன்படுத்தி, மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படும் வழக்கே இவ்வாறு விசாரிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)