பசிலுக்கு நீடிக்கும் விளக்கமறியல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) கடுவல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.