பசில் உடனான சந்திப்பில் 16 பேர் கொண்ட அணியினரின் தீர்மானம்…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டங்களில் தாம் இனி கலந்துக் கொள்ளப் போவதில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட அணியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

நேற்று(28) மாலை நடைபெற்ற இந்த சந்திப்பில், அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

எஸ்.பி.திஸாநாயக்க, டிலான்பெரேரா மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஏனைய 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ஜீ.எல்.பீரிஷ் மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.