பசில் நிரபராதியாக செலவிடும் செலவு குறித்து பேராசிரியர் சரத் கருத்து

ராஜபக்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் பல மில்லியன் ரூபாவை பணம் செலவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பேராசிரியர் சரத் விஜேசூரிய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவை கைது செய்யாமல் இருப்பதற்காக நீதிமன்றில் பிணை பெற்றுக்கொள்வதற்கு அவர் செலவிட்டுள்ள பணம் 60 இலட்சம் ரூபாவாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு மருத்துவ அறிக்கை பெற்றுக்கொள்வதற்காக செலவிடப்பட்டுள்ள பணம் 50 இலட்சம் ரூபாவாகும். அச்சத்தில் இருப்பதனாலே அவர் இவ்வாறு சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இத்தகைய சூழ்நிலைகளில் பாரிய அதிகாரப் போராட்டம் ஒன்று உள்ளது. இதனால் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் எங்களுக்கும் பொறுப்புக்கள் உள்ளன.

சமகால ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் மேற்கொள்ளப்படும் அனைத்தையும் 100% வீதம் எங்களால் அனுமதிக்க முடியாது. எனினும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கி மக்கள் சக்தியுடன் அதிகார போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராஜபக்சர்களுக்கான கதவை திறக்க எங்களால் முடியாது.

நாம் அனைவரும் இது குறித்து சிந்திக்க வேண்டும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.