திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்துடன் கூடிய நாட்காட்டிகளை அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(04) தீர்மானித்துள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 லட்சம் ரூபா பணத்தை செலவிட்டு, 50,000 நாட்காட்டிகளை அச்சிட்டதற்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.