பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பாணை

முன்னாள் பொருளாதார அமைச்சர்  பசில் ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் முதலாம் திகதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்றைய  தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த பசில் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரச சொத்துக்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கம நெகும திட்டத்தின் மூலம் 155 மில்லியன் ரூபா நிதியினை மோசடி செய்துள்ளதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பிலேயே எதிர்வரும் முதலாம் திகதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.