பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு இன்று(22) நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரையில் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி தருமாறு பசில் இவ்வாறு கோரியுள்ளார்.

குறித்த இந்த கோரிக்கை தொடர்பில் இம்மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சரோஜினி குசல வீரவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவருடைய கடவுச் சீட்டு நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.