பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்பினை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் நிறுவனத்திற்கு தேவையான நிலப்பகுதியினை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெள்ளை புள்ளி நோய் காரணமாக வருமானம் ஈட்டித் தரும் இலங்கை இறால் வளர்ப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த நோய்க்கு தாக்கு பிடிக்கின்ற மற்றும் உலக சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகின்ற பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் நிறுவனத்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குள் 250 ஏக்கர் கொண்ட நிலப்பகுதியினை 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

(rizmira)