படகு கவிழ்ந்து விபத்து – சிறுவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை சிறுவர்கள் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த சிறுவர்களில் 24 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.