படக் காட்சிகளை உதாரணமாகக் நாடாளுமன்றில் அமைச்சர்

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தன் உரையின் போது விஜயின் கத்தி படத்தில் வரும் ஒரு சில காட்சிகளை உதாரணம் காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதில் இந்த அமைச்சின் பிரதியமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க உரையாற்றுகையில்,

அண்மையில் தென்னிந்திய இயக்குநர் தயாரித்து நடிகர் விஜய் நடித்த கத்தி படம் பார்த்தேன்.

அதில் நடிகர் ஒருவர் நாயகன் விஜயைப் பார்த்து கம்யூனிஸ்ட் வாதம் தொடர்பாக சுருக்கமாக விளக்கமொன்றைக் கேட்பார். அதற்கு நாயகன் விஜய் தான் நன்றாக வயிறு நிறைய உண்ட பின்னர் மேலதிகமாக உண்ணும் ஒவ்வொரு உணவும் மற்றையவருடையது. இதுதான் பேராசை. இந்தப் பேராசை தான் கடந்த ஆட்சிக் கால அரசியல்வாதிகளிடம் இருந்தது என்றார்.