படப்பிடிப்பு தளத்தில் சூரியின் செயல்…

தற்போது சூரி முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பின் போது நடிகர் சூரி, பாட்டிகளோடு சேர்ந்து செல்பி எடுத்திருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)’ என்று பதிவு செய்திருக்கிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார். கிராமத்து பின்னணி இப்படம் உருவாகி வருகிறது.