படப்பிடிப்பு பூஜைக்கு இந்தியன் தாத்தாவாக வந்த கமல்…

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பம்.

22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள்.

பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார்.

இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். சென்னையின் புறநகர் பகுதியில் பிரம்மாண்ட அரங்குகளுடன் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.

உக்ரைனில் முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்தியன் முதல் பாகம் முடிவில் 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும், வெளிநாட்டில் இருந்து அவர் போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர்.