பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச சேவைகளுக்கான பயிற்சிகளில் 50000 பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கான 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.