தம்முடைய சலுகைகளைப் போலவே இந்நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகள் குறித்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று(09) கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ரயில் பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பால் உயர்தரப் பரீட்சை நிறைவடைந்து வீடுகளுக்குச் செல்லக் காத்திருந்த மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இந்நிலை மிகவும் கவலைக்குரியது. பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள யாரும், எந்த நேரத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடலை முன்னெடுக்க சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கத்தைப் போல எதிர்ப்பார்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நேரத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.