பணிப்புறக்கணிப்பினை கைவிடாத விடத்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான அனுமதிப் பத்திரம் இரத்து..

தென் மாகாணத்தில் தனியார் பேரூந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிடவில்லையெனின் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மாகாண நெடுந்தூர சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவையாளர்களின் இந்த பணிப்புறக்கணிப்பால் கொழும்பிற்கு வரும் பயணிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டே குறித்த இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறுந்தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகளின் தரிப்பிடங்களில், நெடுந்தூர சேவை பேரூந்துகளை நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.