மாலபே, சைட்டம் தனியார் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்தக் கோரி மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத ஓட்டுனர் சங்கமும் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளது.
இன்று(05) பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை வழமை போன்று அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இன்று காலை 08 மணியின் பின்னர் புகையிரதங்கள் போக்குவரத்தில் ஈடுபடாது என்று லோகோமோட்டிவ் பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறியிருந்தார்.
இன்றைய நாளில் சேவையில் ஈடுபடவுள்ள ஏனைய 300 புகையிர சேவைகளில் முக்கியமான 30 புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.