பணிப்புறக்கணிப்பிற்கு மேலும் சில போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு…

புதிய அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினரால் இன்று(15) நள்ளிரவு 12 மணி முதல் மேற்கொள்ளப்படவுள்ள பணிப்புறக்கணிப்பிற்கு மேலும் சில போக்குவரத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதில் அரச முற்போக்கு சாரதிகள் சங்கம், கொழும்பு நகரை அண்டிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், மேல் மாகாண தனியார் பேருந்து சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.