புகையிரத திணைக்களம் சார்ந்த பணியாளர்களது சுமார் 40 தொழிற்சங்கள் மேற்கொள்கின்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(31) தீர்மானிக்கவுள்ளதாக புகையிரத தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று(31) முற்பகல் இடம்பெறவுள்ள தொழிற்சங்க கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
12.1% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத தொழில் நுட்பவியலாளர்கள் நேற்று முன்தினம்(29) மாலை 4 மணிமுதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.