(FASTNEWS| COLOMBO) – ரயில்வே பணிப்புறக்கணிப்பினை தொடர்ந்தும் முன்னெடுப்பு தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகள் இடையே இன்று(02) மதியம் 02 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பிரதான கோரிக்கையான சம்பள முரண்பாடுகளுக்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்றைய கலந்துரையாடலில் பின்னர் தீர்மானம் ஒன்று எட்டப்பட்டு அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், இணக்கப்பாடுகள் எதுவும் அரசு வழங்காதவிடத்து ஒவ்வொரு வியாழக்கிழமை நள்ளிரவும் 24 மணித்தியால தொடர் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் சில தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.