பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு…

தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று(05) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு முதல் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடுமுழுவதும், தபால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான தபால்கள் மற்றும் பொதிகள் அஞ்சல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.