தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் ரயில் தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்திற்கு ரயில் கண்காணிப்பு முகாமைத்துவக்கு உட்பட்ட 5 தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவளிக்காத சேவையாளர்களை ஈடுபடுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டி, சிலாபம், ரம்புக்கனை, காலி, அவிசாவளை மற்றும் மஹவ ஆகிய பகுதிகளுக்கு 8 ரயில் சேவைகள் இடம்பெற்றன.
குறித்த இந்த ரயில்கள் இன்று காலை மீண்டும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக பல்வேறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதன் காரணமாக தற்போது போக்குவரத்தில் ஈடுபடும் 8 ரயில் போக்குவரத்தையும் நிறுத்த நேரிடும் என இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.