தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகையினை முன்னிட்டு எதிர்வரும் 13,14 ஆகிய தினங்களில் நாடு முழுவதிலும் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் குறித்த இந்த இரண்டு தினங்களிலும் கலால் திணைக்கள அதிகாரிகள் நாடு முழுவதிலும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள உள்ளனர்.
மதுபான கடைகளை திறப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.