பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவை…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(22) முதல் நாடளாவிய ரீதியில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.

எதிர்வரும் ஜனவரி 03 ஆம் திகதி வரை குறித்த இந்த விசேட சேவை நடைமுறைபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் டி. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இதற்கென 150 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதேவேளை, கத்தோலிக்கர்கள் அதிகமாக வாழும் வத்தளை, ஜா -எல, நீர்கொழும்பு, வெலிசர, சிலாபம், களுத்தறை மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அதிகமான பஸ்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக டி. ஏ. சந்திரசிரி சுட்டிக்காட்டினார்.

#reeshma..