(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு சந்தையில் விற்கப்படும் உணவு வகைகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகள் இன்று(25) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பிற்காக சுமார் 2000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.