பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைவு…

அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியில் இருந்து நீக்கப்பட்டதனை அடுத்து அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணையப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று(30) பதவி நீக்கம் செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)