பதில் பிரதம நீதியரசராக நீதிபதி பிரியசாத் சத்தியப்பிரமாணம்

உச்ச நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்று(27) காலை ஜனாதிபதி காரியாலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது