சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ். எம். விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே. இளங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபராக எஸ். எம். விக்ரமசிங்க நியமனம்