பதில் பொலிஸ் மா அதிபராக இன்று(25) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெளிநாட்டு விஜயம் ஒன்றில் ஈடுபட்டிருப்பதன் காரணமாகவே குறித்த இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் நடைபெறவிருக்கும் 86வது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று(25) காலை பயணமானதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)