“பதுளைக்கு கோட்டா வந்தால் நான் தலையினால் நிற்பேன்”

(FASTNEWS | COLOMBO) – “பதுளையில் மொட்டின் வெற்றிக்கான முதல் மக்கள் பேரணிக்கு கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்தால், நகரின் கடிகார தூணுக்கு முன்னால் 125 கிலோ கிராம் எடை கொண்ட நான் தலையினால் நிற்பேன்” என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்திருந்தார்.

இன்று(23) மாகாண சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.