பதுளை – வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக உள்ள குப்பை மேட்டில் கடந்த மூன்று நாட்களாக பரவி வந்த தீ கட்டுப்பட்டுப்பட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் அறிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக வான்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டதன.
குறித்த தீ காரணமாக பதுளை நகரில் உள்ள 5 பாடசாலைகள் நேற்று(11) மூடப்பட்டன.
இதன்படி பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், கனிஸ்ட்ட சரஸ்வதி, அல் அதான் வித்தியாலயம், விகாரமஹாதேவி மகா வித்தியாலயம், ஊவா கல்லூரி, தர்மதூத ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இன்று குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.