பதுளை நகரில் உள்ள குப்பை மேடொன்றில் பரவி வரும் தீயினால் மீத்தேன் வாயு பரவக்கூடிய ஆபத்து காணப்படுவதாக பதுளை மாநகர ஆணையாளர் ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
இதனால் சுவாசிக்க சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறும், பொதுமக்கள் முக உறைகளை பயன்படுத்துமாறும் குறித்த ஆணையாளர், மக்களிடம் கோரியுள்ளார்.
பதுளை வின்சென்ட் டயஸ் மைதானத்திற்கு பின்னால் உள்ள குப்பை மேட்டில் நேற்று மாலை இவ்வாறு திடீரென தீ பரவியுள்ளது.