நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மழையுடனான காலநிலை நிலவுமெனின், பதுளை மாவட்டத்தின், பசறை, பதுளை, ஹாலி-எல, பண்டாரவளை, ஊவா பரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, வெலிமடை, லுணுகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், ஹப்புத்தளை, வெலிமடை செயலாளர் பிரிவுகளுக்கு அண்மித்த பகுதிகளுக்குமே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும், மொனராகலை மாவட்டத்தின் மாவட்டத்தின் அனேக பகுதிகளுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.