இலங்கையில் பத்திரிகை சபையை மீண்டும் உருவாக்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
1973ஆம் ஆண்டு பத்திரிகை சபை முதன் முறையாக அமைக்கப்பட்டது. இதற்கு உள்ளூர் ஊடக நிறுவனங்களில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
எனினும் இச்சபையின் ஊடகவியலாளர்களின் செய்திகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அந்த சபை தொடர்பில் தொடர்ந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திரிகை சபையை கலைத்தார்.
எனினும் கடந்த 2ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சபைக்காக இரண்டு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
இது ஏற்கத்தக்க விடயம் அல்ல என்று ஊடகவியலாளர்களை பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
(riz)