பத்து வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்வதற்காக பாகிஸ்தான சென்றிருந்த இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு உரிய சூழ்நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் இலங்கை அணியினர் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியளித்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் கராச்சியில் டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என தெரிவித்துள்ளனர்.

முதலாவது டெஸ்ட் போட்டி ஒக்டோபர் முதலாம் திகதி கராச்சியில் இடம்பெறலாம் என பாகிஸ்தானின் சிந்து மாநில அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.