இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாளில் போட்டி நடைபெறும் போது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டிற்காக இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனது போட்டிப் பணத்தில் 100 வீதத்தை செலுத்த வேண்டியுள்ளதுடன், 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் சந்திமாலுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், பந்தின் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் நிராகரித்திருந்தார்.
இதனிடையே, போட்டிக்கு இடைநடுவே சந்திமால் தனது காற்சட்டை பையில் ஏதொவொன்றை எடுத்து வாயில் போட்டுமென்று அதனை பந்தின் மேற்புறத்தில் தடவி, துடைத்த காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.