முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவிடம் நஷ்டயீடு கோரி லிட்ரோ கேஸ் நிறுவனம் சட்டபூர்வமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப் போவதாக பந்துல குணவர்தன அண்மையில் பிரசாரமொன்றை மேற்கொண்டிருந்தார்.
மேற்படி பிரசாரத்தின் ஊடாக லிட்ரோ நிறுவனம் மற்றும் அதன் முகாமைத்துவத்துக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகக் கருதுவதால், ஒரு பில்லியன் ரூபா நஷ்டயீடு கோரியே நிர்வாகம் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது