பந்துல உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை விசாரணைக்கு..

இலங்கை துறைமுக அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரியாத் பந்துல விக்கிரம உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை துறைமுக அதிகார சபையின் 319 ஊழியர்களை கடமைக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமையினால், அரசுக்கு 650 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக தெரிவித்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

(rizmira)