அபிவிருத்தி லொத்தர் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியவற்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும், வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறுக் கோரி, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை இன்று(06) தாக்கல் செய்துள்ளார்.
குறித்த இந்த மனுவில் பிரதிவாதிகளாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
(rizmira)