லேக்ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ரூபா.200 மில்லியன் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களிடமிருந்து ரூபா.300 மில்லியன் நஷ்டஈட்டுத் தொகையினை கோரி, வழக்கறிஞரின் உதவியோடு நேற்று(13) கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று(14) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
பிணை முறி குறித்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தான் கூறியதாக பொய்யான செய்தியினை வெளியிட்டதற்காக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், தன்னை கொச்சைப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர் கருத்து வெளியிட்டமைக்கு அவரிடமிருந்து ரூபா.300 மில்லியன் நஷ்டஈடு கோரி சட்டரீதியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்த்தன ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
பிணை முறி மோசடி குறித்த உண்மை நிலையினை எடுத்து கூற தாம் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த போதிலும், தான் எவ்வித பொய்யான கருத்துக்களையோ தகவல்களையோ வெளியிடவில்லை எனவும், இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் சார்பில் கடிதமொன்றினை வழங்க எண்ணியிருந்த போதிலும் அதற்கு நேரம் இடமளிக்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.