பந்து நெஞ்சில் பாய்ந்ததில் சந்திமாளுக்கு இன்று பரிசோதனை..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம்(21) இடம்பெற்ற நிலையில், இரவு ஆட்டத்தின் போது பந்து நெஞ்சில் தாக்கியதால் தினேஷ் சந்திமால் உபாதைக்கு ஆளாகியிருந்தார்.

குறித்த உபாதையானது உயிராபத்து அற்றது என இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முழுமையான பாதுகாப்பு கருதி இன்றையதினம் காலை MRI ஸ்கேன் பரிசோதனைக்கு சந்திமால் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

56 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், மோசஸ் ஹென்றிக் இனது பந்தானது இவ்வாறு தாக்கியமையினால் சந்திமால் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார்.

அந்நேரமே, வலிநிவாரணியினை உட்கொண்டு தொடர்ந்தும் ஆட்டத்தில் இருந்து 80 புள்ளிகளை குவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.