பந்து வீசுவதில் சந்தேகம் தெரிவித்து தடை விதிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்து வீச்சினை சரி செய்து கலந்துரையாட இந்தியா நோக்கி பயணமாக உள்ளதாக இலங்கை தேசிய அணியின் சுழற் பந்து வீச்சு பயிற்சியாளர் பியல் விஜேதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பந்து வீச்சில் 15 பாகைக்கு கையினை மடக்க வேண்டியதில் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் 04 பாகை குறைகிறது. அதன்படி 2019 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்பதாக குறித்த பிழையினை திருத்தி ஐ.சி.சி முன்னிலையில் பயிற்சிக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.