பந்தை சேதப்படுத்தல் – 06 டெஸ்ட் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை – புதிய தண்டனைகளை அமுல்படுத்தியது ஐசிசி…

‘Gentleman’s Game’ என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு, வீரர்கள் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும் என்பதற்காகக் களத்தில் விசேடமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அதன் பொருட்டு பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு 06 டெஸ்ட் போட்டிகள் அல்லது 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் சபையினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் கூறுகையில்;

“.. ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கிரிக்கெட் கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஐசிசி ஏற்றுக் கொண்டதால், இனிமேல் பந்தை சேதப்படுத்திய ஒரு வீரர் சிக்கினால், அவருக்கு 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகள் தடை விதிக்கப்படும்.

எதிரணி வீரர்களைத் திட்டுதல் லெவல்2,3 குற்றமாகவும், அவதூறான வார்த்தைகளை களத்தில் பேசுதல் லெவல்1 வகை குற்றமாகவும், நடுவரின் முடிவுக்குக் கட்டுப்படாதது லெவன் 1 வகை குற்றமாகவும், பந்தைச் சேதப்படுத்தினால், ஏமாற்றினால், லெவல் 3 வகை குற்றமாகவும் கருதப்படும்.

ஐசிசியால் வழங்கப்படும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் வீரர்கள், அதற்குரிய கட்டணத்தை இனி செலுத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்டாவிட்டால், செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்படும்.

மேலும், ஸ்டெம்பில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோபோன் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆதலால், ஸ்டெம்மைக்ரோ போன் எந்நேரத்திலும் நேரலையில் ஒலிபரப்பப்படும். களத்தில் வீரர்களின் செயல்பாட்டுக்கும், நடத்தைக்கும் அணியின் நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும்..” என தெரிவித்துள்ளார்.