அண்மைக்காலங்களாக உலகளவில் அதிகம் பேசப்படும் பேசு பொருள்தான் ‘பனாமா பேபர்ஸ்’. குறித்த பட்டியலானது நேற்றை தினம் (10) ஊடகங்களிலும் சமூக ஊடக இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளதனை அடுத்து அது பற்றிய விசாரணைகள் தலைதூக்கியுள்ளது.
எதுஎவ்வாறாயினும், குறித்த பட்டியலில் இலங்கை விவரப்படி அவன்ட்கார்ட் நிறுவனமும் சிக்கியுள்ளது. இதுகுறித்து சேனாதிபதி அவரது சட்டத்தரணி மூலம் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி நிஷான் பிரேமரத்ன கூறுகையில்; “தன்னுடைய பணம் பனாமாவில் கிடையாது என , அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தெரிவிக்க விரும்புவதாகவும், அவன்ட் காட் மெரின்டைம் தனியார் நிறுவனத்தின் மூலம் தனது கட்சிக்காரர் உழைத்த பணம் அனைத்துமே, வெளிநாட்டுப் பணத்திலேயே பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘ஊடகங்களால் தெரிவிக்கப்படுவதன்படி, எனது கட்சிக்காரரின் பனாமா கணக்குகளில் ஒரு டொலராவது காணப்பட்டால், அதை அவர் நிறுவுநரிடம் அன்பளிப்பாக வழங்குவார்’ என அவர் தெரிவித்தார்.
அரச பதவிகளை வகித்தவர்கள், பனாமா கணக்குகளை வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டால், அவர்கள் முக்கியமாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டு, அவர்களது வருமானத்தின் வழிவகைகள் குறித்து அறியப்பட வேண்டுமெனவும், சேனாதிபதி தெரிவித்தார்.
குறித்த பனாமா ஆவணங்களில், பல்வேறான பெயர்கள் காணப்படும் நிலையில், தனது கட்சிக்காரரின் பெயர் மாத்திரம் பெரிதுபடுத்தப்பட்டு, பழித்தூற்றப்படுவது ஏன் எனவும், சட்டத்தரணி பிரேமத்ரன மேலும் கேள்வி எழுப்பியிருந்தார்.
(rizmira)