பனாமாவிலுள்ள நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதி, சட்ட ரீதியானது எனவும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது எனவும் பனாமா மர்யா பொன்சேகா சட்ட நிறுவனத்தின் அதிகாரியான ரேமன் பொன்சேகா அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்த நிதி தொடர்பில் காணப்படும் சட்டங்கள் இன்னும் நடைமுறையில் காணப்படுவதாகவும், இது தொடர்பில் பனாமா சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.