பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ள.
எனினும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சேத விபரங்கள் இது வரையில் வெளியாகவில்லை.
மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையினை வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த 1988ஆம் ஆண்டு, 7.0 என்ற ரிச்டர் அளவில் சுனாமி பேரலை ஏற்பட்டது. இதன் போது 2100 பேர் எய்டெப் நகர பகுதியில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.