பப்புவா நியூகினியா தீவில் வெடித்து சிதறும் எரிமலை – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…

ஒசானியாவில் அமைந்துள்ள பப்புவா நியூகினியா தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலை வெடித்து சிதறி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பப்புவா நியூகினியா தீவு அருகில் உள்ள கடோவர் தீவிலுள்ள எரிமலை கடந்த 5-ம் திகதி முதல் குமுறி கொண்டிருந்தது. இதற்கிடையே, அந்த எரிமலை நேற்று முன்தினம் வெடிக்க ஆரம்பித்ததை தொடர்ந்துஅந்த எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெளிப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளியேற்றப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய வெளியுறவு துறை மந்திரி ஜுலி பிஷப் டுவிட்டரில் பதிவிடுகையில், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.