பப்புவா நியூ கினியா தீவில் நேற்று(04) மாலை 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, பல வீடுகள் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.