பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பேர் உயிரிழப்பு…

பப்புவா நியூகினியா தீவில் நேற்று(06) மீண்டும் 6.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதுடன் இந்த நிலநடுக்கத்தால் 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.