பம்பலபிடிய விபத்தில் பாதசாரி ஒருவர் பலி..

தெஹிவளை – பம்பலபிடிய பிரதான வீதியில் விவேகானந்த சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

வீதிக்கு அருகாமையில் சென்ற நபர் ஒருவரை வேகத்தினை மிஞ்சிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியமையே குறித்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த குறித்த நபர் ஹட்டன், கோல்ட் சற்றம்வத்த பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட 69வயது மதிக்கத்தக்க நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)