பம்பலபிடி கோடீஸ்வர வர்த்தகர் ஷகீப் சுலைமான் கடத்தப்பட்டு கப்பம் கோரி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமோர் சந்தேக நபரினை கொழும்பு மகேஸ்திராத் நீதிமன்றம் இன்று(09) கைது செய்துள்ளது.
குறித்த சந்தேக நபருடன் தற்போதைக்கு 9 பேரளவு கைதாகியுள்ளனர்.
மேலும், குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக கருத்தில் கொள்ளப்பட்ட ஐந்து நபர்களதும் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்ட தடையினை நீக்கியுள்ளதாகவும் நீதவான் மேலும் தெரிவித்திருந்தார்.
அவர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அல்லர் என இரகசிய பொலிசார் விடுத்த தகவல்களினை பரிசீலனை செய்தே குறித்த தடையினை தகர்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.